பாட்னா, பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பீகாரில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. 19 லட்சம் பேர் பாதிப்பு இந்நிலையில், கனமழையால் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கை ஆற்றின் கிளை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் பீகார் தலைநகர் பாட்னா, போஜ்பூர், சரன், வைஷாலி, பஹல்பூர், பெகுசாராய், புக்சர், சமஸ்திபூர், முன்கர், கதிகர், அரசியா ஆகிய 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் 330 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த கனமழை, வெள்ளத்தால் அம்மாநிலத்தில் 19 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/pekaril-kanamzhai-vellam-19-latcham-per-pathippu




