கொழும்பு, இலங்கை, பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் இலங்கை வென்றது. இதன் மூலம் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் டி20 தொடரையும் இலங்கை கைப்பற்றியுள்ளது. 3வது டி20 இந்நிலையில், இலங்கை - பாகிஸ்தான் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 நாளை நடைபெற உள்ளது. தம்புலா மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை முழுமையாக கைப்பற்ற இலங்கையும், ஆறுதல் வெற்றிபெற பாகிஸ்தானும் போராடும் என்பதால் நாளைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/last-t20-sri-lanka-pakistan-clash-tomorrow




