இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக தமன்னா திகழ்கிறார். குத்துப்பாடல்களில் கவர்ச்சி நடனம் போட்டு ரசிகர்களின் இதயங்களை வசப்படுத்தி வருகிறார். தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கும் 'புருஷன்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர இந்தியில் 5 புதிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னா பேசும்போது, “ரசிகர்களை மகிழ்விப்பது தான் ஒரு நடிகையாக எனக்குள்ள பொறுப்பு என்று நினைக்கிறேன். அப்படி ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகைகளை கொண்டாடுங்கள், விமர்சிக்காதீர்கள். போலியான தகவல்களையும், புகைப்படங்களையும் பரப்பி ஆனந்தம் கொள்ளாதீர்கள். இது என் தாழ்மையான வேண்டுகோள்" என்றார். தமன்னாவின் இந்த கருத்து கவனம் ஈர்த்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/celebrate-actresses-dont-criticize-tamannaah




