ஷென்சென், சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெற்றி சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் நூர் முகமது அஸ்ரின் அயூப்-டான் வீ கியாங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 21-16, 18-21, 21-11 என்ற செட் கணக்கில் மலேசிய இணையை வீழ்த்தியது. 66 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்ற சாத்விக்-சிராக் ஜோடி, சீன மாஸ்டர்ஸ் தொடரில் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முதல் பட்டத்தை வெல்லுமா? இதற்கு முன்பு 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் சீன மாஸ்டர்ஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சாத்விக்-சிராக் ஜோடி, அந்த இரு முறையும் 2-வது இடத்தையே பிடித்தது. இதனால், இந்த முறை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சீன மாஸ்டர்ஸ் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய ஜோடி களமிறங்குகிறது. சீன ஜோடியுடன் இன்று மோதல் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சாத்விக்-சிராக் ஜோடி, சீனாவின் ஹி ஜி டிங்-ரென் ஸியாங் யு ஜோடியை எதிர்கொள்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/othersports/china-masters-satwik-and-chirag-in-the-final-for-the-third-time-will-they-win-their-first-title




