கூடலூர், கூடலூர் அருகே போக்கு காட்டும் புலியை பிடிக்க கோவை, தேனியில் இருந்து வன உயர் அடுக்குப்படையினர் வரவழைக்கப்பட்டு, தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். மோசமான வானிலை நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரை புலி கடித்து கொன்றது. இதைத் தொடர்ந்து தமிழக தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவின் பேரில், கூடலூர் வன அலுவலர் தேவராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 3 தெர்மல் டிரோன்கள், 130 தானியங்கி கேமராக்கள், 11 கூண்டுகளை பயன்படுத்தி புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், மோசமான வானிலை காரணமாக புலியின் நடமாட்டத்தை கண்டறிய முடியாமல் வனத்துறையினர் சிரமம் அடைந்து வருகின்றனர். போக்கு காட்டும் புலி இதனால் 5 நாட்கள் ஆகியும் வனத்துறையினருக்கு ஆட்கொல்லி புலி போக்கு காட்டி வருகிறது. நேற்று 6-வது நாளாக கோவையில் இருந்து வரவழைக்கப்பட்ட 12-வது ராட்சத கூண்டை வனத்துறையினர் பொருத்தினர். இதுதவிர மொத்தம் 130 தானியங்கி கேமராக்களையும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால், அதில் புலியின் நடமாட்டம் பதிவாகவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். வன உயர் அடுக்குப்படையினர் இந்தநிலையில் ஏற்கனவே கோவை உள்பட முக்கிய இடங்களில் இருந்து கூடுதலாக வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இதேபோல் தேனியில் இருந்து வனச்சரகர் தலைமையிலான வன உயர் அடுக்குபடையி னர் 10-க்கும் மேற்பட்டோர் ஓவேலிக்கு வரவழைக்கப்பட்டு, புலியை பிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணி மற்றும் அதிநவீன தெர்மல் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் தடை இதேபோல் புலி நடமாட்டம் மற்றும் அச்சுறுத்தல் உள்ள கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு, பொதுமக்கள் வெளியே நடமாட வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். தெய்வமலை, மேட்டூர், குறிஞ்சி நகர், முல்லை நகர், காந்தி நகர், வளப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வேலை நிறுத்தம் இந்நிலையில் கூடலூரில் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஓவேலி லாரஸ்டன் பகுதியில் 2 பேரை தாக்கிக்கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி 10 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோத்தகிரி தாலுகாவில் அதிகரித்து வரும் மனித-வனவிலங்கு மோதலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொறுப்பாளர் குருமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில், கூடலூரில் 2 பேரை கடித்து கொன்ற புலியை பிடிக்க கோரி 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு ஆதரவாகவும், கோத்தகிரி பகுதியில் மனித-வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நாளை கோத்தகிரி மார்க்கெட் திடலில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வனவிலங்கு தாக்குதலால் உயிரிழந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/strike-and-shop-closures-in-gudalur-today-and-tomorrow




