மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கனிதா சம்பத்தை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்.3) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், " தவெக தலைமையில் உள்ள கூட்டணி அமைச்சர், கூட்டணித் தலைவர்கள் வெவ்வேறு பாதைகள் இருந்தாலும் ஒரே கொள்கை என்று சொல்கிறார். இதே பாணியில் தான் திமுக கூட்டணியில் விசிக, ஐ.யூ.எம்.எல், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இருந்தது. அப்போதும் ஒத்த கொள்கையினுடைய கூட்டணி என்று சொன்னார்கள். அந்த கூட்டணி இப்போது சிதறி போய்விட்டது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆனால் அதிமுக கூட்டணி அப்படி அல்ல, கூட்டணி வேறு கொள்கை வேறு. கொள்கை நிரந்தரமானது, கூட்டணி அந்தந்த அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுபடும். 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையில் இருக்கிற கூட்டணியைப் பற்றி கல்லாப்பெட்டி கூட்டணி என்று தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்தார். இப்போது அந்த கூட்டணியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தவெக தலைவர் முதலமைச்சர் ஆவதற்கு அந்தர் பல்டி அடித்து அவர் தலைமையில் சென்றிருக்கிறார்களே. அந்த கூட்டணியை என்னவென்று சொல்வது? இவர்கள் எல்லாம் நாட்டு மக்களுக்கு சேவை செய்வார்களா? "ஜெயிச்சாலும் தோத்தாலும் கரை வேட்டியைக் கட்டிக்கிட்டு கெத்தா நடப்போம்" - விஜய்யை விமர்சித்த ஸ்டாலின் தவெக தலைவர் விஜய், வெளிப்படைத்தன்மையாக இருப்போம், தூய சக்தி என்கிறார். இவர் தூய சக்தியா? எப்போது நம்முடைய எம்.எல்.ஏக்களை திருடினாரோ அப்போதே திருட்டு சக்தி ஆகிவிட்டார். இந்தியாவிலேயே இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆட்சி தமிழகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது" என்றார். முதல்வர் விஜய் தொடர்ந்து பேசிய அவர், " மதுராந்தகம் வந்தவர் டிராக்டர் ஓட்டி இருக்கிறார். இப்போது தான் டிராக்டரை பார்த்திருக்கிறார். இத்தனை நாள் டிராக்டரை பார்த்ததில்லை. அவர் படத்தில் நடிக்கும்போது டிராக்டர் பார்த்ததில்லைப் போல அதனால் கண்காட்சியில் பார்ப்பதுபோல் பார்த்து ஓட்டியிருக்கிறார். நாங்கள் எல்லாம் விவசாயி. எனக்கு சொந்தமாக டிராக்டர் இருக்கிறது. விவசாயம் செய்துகொண்டிருக்கிறோம். விஜய் அவர்களே டிராக்டர் ஓட்டினால் மட்டும் விவசாயி ஆக முடியாது" என்று விமர்சித்திருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group. இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும். வணக்கம், BIG BREAKINGS முதல். அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/admk-edappadi-palanisamy-slams-tvk-vijay-and-alliance




