அக்டோபர் மாதம் கார் ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாதமாக இருக்கிறது. ஹேட்ச் பேக் தொடங்கி ஆடம்பர எலெக்ட்ரிக் கார்கள் வரையில் இந்த மாதம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புத்தம் புதிய கார்களை உலகின் முன்னணி நிறுவனங்கள் அறிமுகப்படுத்த இருக்கின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் 22 கி.மீ மைலேஜ் கொண்ட பேயோன் முதல் ரெனால்ட் டஸ்டரின் ஹைபிரிட் வரை அக்டோபர் 2026-ல் அறிமுகமாக இருக்கும் 10 கார்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஹூண்டாய் பேயோன் (Hyundai Bayon) தென்கொரியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், மாருதி சுசூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மற்றும் விக்டோரிஸ் ஆகிய கார்களுக்குப் போட்டியாக மிட்-சைஸ் எஸ்.யூ.வியாக பேயோன் வேரியண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காராக பேயோன் இருக்கிறது. எஸ்.யூ.வி ரேஞ்சில் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் வென்யூ (Venue) மற்றும் கிரெட்டா (Creta) மாடல்களுக்கு மத்தியில் இதை பொசிஷன் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டிருக்கிறது. பெட்ரோல் என்ஜினுடன் மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் வேரியண்ட்களில் இதை களமிறக்க இருப்பதாக ஹூண்டாய் ஏற்கனவே அறிவித்திருக்கிறது. முத்தாய்ப்பாக இதன் மைலேஜ் 22 கி.மீ வரைக்கும் இருக்கும் என்பதும் இதன் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அறிமுக விலை - ரூ.9.50 லட்சம் முதல் ரூ. 14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் டஸ்டர் ஹைபிரிட் (Renault Duster Hybrid) இந்த வருட அறிமுக லிஸ்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மற்றொரு கார் ரெனால்டின் டஸ்டர் ஹைபிரிட். 2026 பண்டிகை காலத்தில் எங்களிடமிருந்து ஒரு புதிய அறிவிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம் என ரெனால்ட் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், டஸ்டர் ஹைபிரிட் மாடலை வரும் அக்டோபர் 17-ல் அறிமுகப்படுத்த இருப்பதாக தேதியை உறுதி செய்திருக்கிறது. 1.8லி பெட்ரோல் என்ஜினுடன் 1.4 கிலோவாட் பேட்டரி பேக்குடன், 8 ஸ்பீடு ஆட்டோ டிரான்ஸ்மிஷன் கியர் பேக் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் டஸ்டர் ஹைபிரிட் வருகிறது. மொத்தமாக 1,000 கி.மீ ரேஞ்ச் வரும் என்கிறது ரெனால்ட். அறிமுக விலை - ரூ.18.89 லட்சம் என்கிற தொடக்க விலையில் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் (Honda Elevate facelift) ஹோண்டா நிறுவனம் தனது எலிவேட் மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்டை வரும் அக்டோபர் 6-ம் தேதி அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது. பானாரோமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof), பெரிய அளவிலான டச் ஸ்கிரீன் சிஸ்டம் உள்பட கேபினில் கூடுதல் அம்சங்கள் இடம்பெற அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. என்ஜின் பவர் மற்றும் கியர் பாக்ஸ் சிஸ்டம் ஆகியவற்றில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்றே கருதப்படுகிறது. டிசைனைப் பொறுத்தவரையில் கிரில் பம்பர்ஸ் மற்றும் அலாய் வீல்களில் புது லுக் இடம்பெற இருக்கிறது. அறிமுக விலை - ரூ.15.30 லட்சத்தில் இருந்து ரூ.20.50 லட்சம் வரையில் விலை நிர்ணயம் செய்யப்படலாம். டொயோட்டா கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் / ஹைகிராஸ் ப்ளெக்ஸ் ஃப்யூல் (Toyota Glanza facelift/ Hycross Flex Fuel) டொயோட்டா நிறுவனம், பலீனோவின் புதிய வேரியண்ட்டை அறிமுகமகப்படுத்தி ஒரு மாதமே ஆகியிருக்கும் நிலையில், கிளான்ஸோவின் கிராஸ் பேட்ஜ்டு வெர்ஷனை அறிமுகப்படுத்த இருக்கிறது. வரும் அக்டோபர் 14-ம் தேதி அறிமுகமாகும் கிளான்ஸோவில் மேம்படுத்தப்பட்ட ஆடியோ சிஸ்டம், டயர் பிரஷரை கண்காணிக்கும் அமைப்பு, யெஸ் லெவல் 2 ஏடிஏஸ் அமைப்பு ஆகியவை இடம்பெற இருக்கின்றன. எரிபொருள் சிக்கனம் அதிகம் கொண்ட புதிய 1.2 லிட்டர் இசட் சீரிஸ் என்ஜின்கள் டொயோட்டா ஆர்வலர்களிடையே அதிக கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, ஹைகிராஸ் மாடலில் ஃப்ளெக்ஸ் ஃப்யூஸ் வேரியண்டும் அறிமுகமாக வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. அறிமுக விலை - டொயோட்டா கிளான்ஸோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ.6.46 லட்சம் முதல் ரூ.9.44 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் (Skoda Slavia facelift) அக்டோபர் இரண்டாவது வாரத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல புதிய அம்சங்களுடன் களமிறக்கப்பட இருக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் 1.0 டர்போ பெட்ரோல் என்ஜின் என அசத்தலாக அறிமுகமாக இருக்கிறது. அதேபோல, புதிய ஹெட்லைட்ஸ், கிரில் மற்றும் டெயில் லேம்ப்ஸ் என எக்ஸ்ட்ரீயரிலும் ஸ்கோடா நிறையவே மாற்றங்கள் செய்திருக்கிறது. கேபினைப் பொறுத்தவரை புதிய டச் ஸ்கிரீன் சிஸ்டம், 360 டிகிரி கேமரா வியூவுடன் வருகிறது. இந்த செக்மெண்டிலேயே இரண்டாவது வரிசையில் இருக்கும் சீட்டுகளும் மசாஜ் வசதியுடன் வரும் முதல் காராக இது இருக்கும். அறிமுக விலை - ரூ.10.25 லட்சம் முதல் ரூ.18.75 லட்சம் வரையில் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/amazing-mileage-intimidating-features-6-cars-to-be-launched-in-the-indian-market-in-october




