உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) காலையில் கோலாகலமாக நடக்கிறது.இதை முன்னிட்டு கோவிலில் பல மாதங்களாக திருப்பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் நடந்தன. தீவிபத்தில் சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிர மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்த ரேசுவரருக்காக பிரத்யேக தங்க குடங்கள் யாக சாலையில் வைக்கப்பட் டன. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கலசங்களில் நிரப்பி யாகசாலை யில் வைத்து தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன. 400-க்கும் மேற் பட்ட சிவாச்சாரியார்கள் வேள்விகளை நடத்திவருகின்றனர். கடந்த 11-ந் தேதியன்று முதல்கால யாக பூைஜகள் தொடங்கிய நிலையில், மற்ற கால பூஜைகளும் நடந்து வந்தன. பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் 10-ம்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அந்த வழிபாடு நிறைவு பெற்ற பிறகு பரிவார தெய்வங்களுக் கான கும்பாபிஷேகம் தொடங்கியது.மேளதாளங்கள் முழங்க யானை, டங்கா மாடு அணிவகுத்து செல்ல யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி கோவிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டன. காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல்குமாரர், தட் சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.மூலவர் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர். தங்க விமானங்கள், சன்னதி விமானங்கள், 12 கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு நேற்று மாலை 11-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று மகா கும்பாபிஷேகம் விழாவின் சிகரமாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் மகா கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) காலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனால் மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டு காணும் இட மெல்லாம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. முன்னதாக இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாக பூஜை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப் பாடு 5.45 மணிக்கு நடைபெற்றது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள், தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றபிறகு சரியாக 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்க கும்பாபிஷேகம் நடைபெறும். பின்பு மூலவர் மீனாட்சி அம்மனுக்கு காலை 8.10 மணிக்கும், சுந்தரேசுவரருக்கு 8.50 மணிக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேம் நடைபெறுகிறது. அதன்பின் னர் அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு வரை நடைசாத்தப்படாமல் மூலவர் தரிச னத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கும்பாபிஷேகத்தை காண முடி யாத பக்தர்களுக்காக இன்றிரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி, சுந்தரேசுவரர் வீதி உலா வந்து காட்சி அளிக்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-madurai-city-wears-a-festive-look




