டெல்லி, நேபாளம் புறப்பட்ட விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று மாலை நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். டெல்லியில் தரையிறக்கம் இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி உடனடியாக மீண்டும் டெல்லி விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து, பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் காத்மாண்டு புறப்பட்டு சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/technical-glitch-nepal-bound-flight-lands-in-delhi




