சென்னை, நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் ஆதரவுக்குரல் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்வை முற்றிலும் ஒழிக்க வேண்டிய நேரம் இது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ” 3 முக்கிய வாக்குறுதிகளுடன் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. 1. சுமையைக் குறைத்தல், 2. வணிகமயமாக்கலை ஒழித்தல், 3. தரத்தை மேம்படுத்துதல். இந்த ஒவ்வொரு அம்சத்திலும் நீட் தேர்வு தோல்வியடைந்துள்ளது. * நீட் தேர்வு கற்றலின் மையத்தை பள்ளிகளில் இருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றி உள்ளது. அவ்வளவு தான். * நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானது. சமீபத்திய நிகழ்வுகள் அதை உறுதிப்படுத்தியுள்ளன. * டெல்லியில் நடைபெறும் போராட்டங்களுக்கு பிறகாவது மத்திய அரசு விழிப்படைய வேண்டும். நீட் விவகாரத்தில் திறந்த மனதுடன், மத்திய அரசு ஆலோசனைகளை நடத்த வேண்டும். * இந்தியாவில் அதிகாரக் குவிப்பு தேவையில்லை, மாறாக மாநிலங்கள் மீதும், அதன் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/this-is-the-time-to-completely-abolish-the-neet-exam-mk-stalins-statement




