பெர்லின், ஜெர்மனியில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நெதர்லாந்தில் இருந்து ஜெர்மனிக்கு சிறிய ரக விமானம் இன்று புறப்பட்டது. விமானத்தில் 3 பேர் பயணித்தனர். விமான ஜெர்மனி வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தது. விமான விபத்து ஜெர்மனியின் மொச்சன்கல்பட்ச் மாகாணம் எர்கிலன்ஸ் ஜெர்டர்த் கிராமம் அருகே பறந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/three-dead-as-small-aircraft-crashes-in-germany




