விந்தோக், ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் நமீபியா போராடி தோல்வியடைந்தது. நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கியது. ஜிம்பாப்வே - நமீபியா நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெற்று வரும் 3வது லீக் ஆட்டத்தில் நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. ஜிம்பாப்வே 195 ரன்கள் இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் ரயன் பெர்ல் அதிகபட்சமாக 57 ரன்கள் குவித்தார். நமீபியா தரப்பில் அந்த அணியின் கேப்டன் ஹர்ஹார்டு எரஸ்மஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நமீபியா 190 ரன்கள் இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நமீபியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 19 ஓவரில் நமீபியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் நமீபியா வெற்றிபெற 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், இறுதியில் நமீபியா 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நமீபியாவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே திரில் வெற்றிபெற்றது. கடைசி வரை போராடிய நமீபியா தோல்வியடைந்தது. கடைசி வரை போராடிய நமீபிய வீரர்கள் சனெ கிரீன் 54 ரன்களும், அலெக்சாண்டர் 56 ரன்களும் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். அதேவேளை, சிறப்பாக பந்து வீசிய ஜிம்பாப்வே வீரர் பிரட் இவன்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/tri-series-t20-namibia-fight-zimbabwe-defeat




