சென்னை, 90 அடி உயர நீர்வீழ்ச்சியிலிருந்து குதிக்க சொன்னார்கள் என்று 'மைசா' பட நிகழ்வில் ராஷ்மிகா பேசி இருக்கிறார். 'மைசா' படத்தில் ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் இவர், கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கன்னட படமான 'கிரிக் பார்ட்டி' மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்', 'பீஷ்மா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, இந்தியில் 'அனிமல்' படத்திலும் நடித்தார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா' படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் ’மைசா’ படத்தில் நடித்துள்ளார். 90 அடி உயரம் இந்நிலையில், 'மைசா' பட நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா மந்தனா, படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட சவாலான அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், ’‘மைசா' படத்தின் ஒரு முக்கியமான காட்சிக்காக 90 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து குதிக்க வேண்டியிருந்தது. அந்தக் காட்சியில் நடிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. 90 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சியில் குதிக்க வேண்டும் என்று கூறியபோது நான் உண்மையிலேயே பயந்துவிட்டேன்"என்றார். பயத்தை தாண்டி மேலும், "பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே குதிப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால், கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மைக்காகவும், காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காகவும் துணிந்து அதைச் செய்தேன்" என்று ராஷ்மிகா தெரிவித்தார். ராஷ்மிகா 90 அடி உயர நீர்வீழ்ச்சி காட்சியில் நடித்ததாக கூறியிருப்பது 'மைசா' படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் நவம்பர் 27-ம் தேதி திரைக்கு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/it-was-so-hard-rashmika-mandanna-reveals-she-was-asked-to-jump-off-a-90-foot-waterfall-for-mysaa




