கோவை, கோவை மாவட்டம் சிறுமுகை அருகே காயத்தால் அவதிப்படும் பாகுபலி யானைக்கு மருந்து கலந்த களி உருண்டைகள் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். வால் பகுதியில் காயம் சிறுமுகை வனச்சரக பணியாளர்கள் வேடர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பாகுபலி என்று அழைக்கப்படும் காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறியது தெரியவந்தது. அந்த யானையை விரட்டும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது அதன் வால் பகுதி யில் காயம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் அரசு வன கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வச்சினம்பாளை யம் பகுதியில் புகுந்த அந்த யானையை சிறுமுகை வனச்சரக அலுவலர் தினேஷ், அரசு வன கால்நடை உதவி மருத்துவ அலுவலர் விஜயராகவன் மற்றும் வனப்பணியாளர்கள் கண்காணித்தனர். களியில் மருந்து அப்போது, மற்றொரு காட்டுயானையுடன் ஏற்பட்ட மோதலில் பாகுபலி யானை காயம் அடைந்து இருப்பது தெரியவந்தது. ஆனால் காயத்திற்கு நேரடியாக மருந்து செலுத்த முடியாது என்பதால் களி உருண்டை தயாரித்து அதில் மருந்துகளை கலந்து பாகுபலி யானை வரும் வழியில் வாழை இலையில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மருந்து கலந்து வைத்த களி உருண்டைகளை பாகுபலி யானை தின்றது. அதன் உடல் நிலை மற்றும் நடமாட்டத்தை வன பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தொடர் சிகிச்சை அளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/forest-department-officials-administered-medicinal-dough-balls-to-baahubali-an-elephant-suffering-from-an-injury




