டோலிவுட் நடிகர் அகில் அக்கினேனி நடித்திருக்கும் 'லெனின்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் புரோமோஷனில் பாக்யஸ்ரீ போர்ஸ் கொடுத்த நேர்காணலில் அவருடைய தந்தை குறித்தும், அவருடைய சிறுவயது வாழ்க்கை குறித்தும் பகிர்ந்திருக்கிறார். Lenin Movie - Akhil Akkineni அந்தப் பேட்டியில் அவர், "நான் பிறந்த அன்றே வாழ்க்கையின் மிகக் கடினமான இன்னொரு பக்கத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். என் பெற்றோர் மிகவும் ஏழ்மையான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இன்று நாம் பார்க்கும் எந்தவொரு நிம்மதியான, நிலையான வாழ்க்கையையும் என் சிறுவயதில் நான் பார்த்ததே இல்லை. எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சினை என் பெற்றோருக்கு வந்துகொண்டே இருக்கும். ஆனால், தங்கள் குழந்தைகளுக்கு நல்லதைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார்கள். ஏனென்றால், நாங்கள் முற்றிலும் பூஜ்ஜியத்திலிருந்து எங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். ஒரு குழந்தையாக இருக்கும்போது பணத்தின் முக்கியத்துவம் நமக்குத் தெரியாது. சாப்பாடு, விளையாட்டு மட்டும்தான் நம் உலகமாக இருக்கும். ஆனால், என் அம்மா ஒரு டைரியில் 10 ரூபாய்க்குப் பச்சை மிளகாய், 10 ரூபாய்க்குப் கீரை என எழுதியிருந்த கணக்குகளை நான் பார்த்திருக்கிறேன். 'இந்த வாரம் 300 ரூபாய் செலவாகிவிட்டது, அடுத்த வாரத்தை எப்படி ஓட்டுவது?' என்று அவர்கள் கணக்குப் போட்டு வாழ்ந்தார்கள். நம் கண்முன்னாடியே பெற்றோர் நமக்காக உழைப்பதையும் கஷ்டப்படுவதையும் பார்க்கும்போது அது மனதை உலுக்கும். என் அப்பா இன்னொருவரிடம் போய், 'எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், தயவுசெய்து எனக்கு ஏதாவது ஒரு வேலை கொடுங்கள்' என்று கெஞ்சிக் கேட்டதை நான் பார்த்திருக்கிறேன். Bhagyashri Borse ஒரு சிறு குழந்தையாக, தன் தந்தை அப்படி கேட்பதை எந்த ஒரு மகளும் பார்க்க விரும்ப மாட்டாள். அந்தத் தருணத்தில் என் மனதில் ஒன்றுதான் ஓடியது. 'இனி ஒருபோதும் என் அப்பா இந்த நிலைக்கு வரக் கூடாது. நான் பெரியவளாக வளர்ந்து என் அப்பாவின் தலை எப்போதும் நிமிர்ந்து வாழும்படி செய்ய வேண்டும்' என்று சபதம் எடுத்தேன். அது சோகமான ஒன்றுதான், ஆனால் என் வாழ்க்கையில் முன்னேற அதுவே எனக்குப் பெரிய உத்வேகமாக அமைந்தது. இன்று எனக்குள் இருக்கும் லட்சியங்கள் எல்லாமே என் பெற்றோருக்காக மட்டும்தான்" எனப் பகிர்ந்திருக்கிறார். பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் 'சேயோன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/tollywood/lenin-movie-actress-bhagyashri-borse-emotional-interview-about-father-and-struggles




