புதுடெல்லி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், நேற்றைய தினம் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் வழக்கம்போல் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது டெல்லி-ஐதராபாத் விமானத்தில் ஏறுவதற்காக வந்த ஒரு பயணியின் கைப்பையை சோதனை செய்த ஊழியர்கள், அதில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அந்த சந்தேகத்திற்குரிய பொருளை வெளியே எடுத்து பார்த்தனர். அப்போது அது ஒரு மண்டை ஓடு என்பது தெரியவந்தது. இது குறித்து அந்த பயணியிடம் கேட்டபோது, அது ஒரு குரங்கின் மண்டை ஓடு என தெரிவித்தார். அந்த பயணி உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மண்டை ஓடு பரிசோதனைக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது வனவிலங்கு தொடர்பான வழக்கு என்பதால், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972-ன் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/skull-found-in-passengers-handbag-commotion-at-delhi-airport




