செயின்ட் கிட்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் தொடரை ட்ரின்பகோவை வீழ்த்தி கயானா அபார வெற்றி பெற்றது. கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. கயானா அமேசான் வாரியர்ஸ் - ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் மோதின. அதேவேளை, மழையால் ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற ட்ரின்பகோ முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கயானா வெற்றி இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கயானா 16 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹெட்மயர் அதிகபட்சமாக 111 ரன்கள் குவித்தார். அதேவேளை, மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி இலக்கு குறைக்கப்பட்டு 16 ஓவரில் 182 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பகோ 16 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதனால், டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றிபெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-guyana-stun-trinbago-for-big-win




