செயின்ட் கிட்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் ஜமைக்காவை வீழ்த்தி கயானா அபார வெற்றி பெற்றது. கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன கயானா அமேசான் வாரியர்ஸ் - ஜமைக்கா கிங்ஸ்மென் இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற கயானா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹசன் கான் அதிகபட்சமாக 62 ரன்கள் குவித்தார். கயானா தரப்பில் பிரிட்டோரியஸ், பெர்ரி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கயானா வெற்றி இதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கயானா 17.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய கயானா வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 54 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-guyana-stun-jamaica




