சென்னை, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தவெக அரசு துணை இந்தநிலையில், சென்னையில் உள்ள் எஸ்.ஆர்.எம். பல்கலை.யில் விளையாட்டு வீரர்கள் விடுதியை திறந்துவைத்த பின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:- நீட் தொடர்பாக போராடுபவர்களுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உள்ளது. அனிதா உள்ளிட்ட பல சகோதர, சகோதரிகளை தமிழகம் இழந்து உள்ளது. நீட்டை தடை செய்ய வேண்டும். டெல்லியின் குரலுக்கும் தமிழகத்தின் குரலுக்கும் வித்தியாசம் உள்ளது. கிராமப்புற மாணவர்களின் சிரமம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். நீட்டை உறுதியாக எதிர்க்கிறோம், வெறும் அரசியலுக்காக அல்ல. ஒருநாள் நீட்டை தடை செய்ய எங்களுடைய குரல் முக்கியமானதாக இருக்கும். அரசியல் லாபத்திற்காக அல்லாமல் நீட்டை உறுதியாக எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/overnment-will-support-students-protest-aadhav-arjuna




