குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக அவர்கள் சாப்பிடும் உணவுகளில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக உடனடியாக வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. சிவிங் கம்: சிறு குழந்தைகள் தவறுதலாக விழுங்கிவிடும் வாய்ப்பு இருப்பதால் சிவிங் கம்மை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இளம் வயது குழந்தைகளுக்கு இதைக் கொடுக்காமல் இருப்பது பாதுகாப்பானது. சாக்லேட், பிஸ்கட்: அதிக சர்க்கரை மற்றும் சேர்க்கைப் பொருட்கள் உள்ள சாக்லெட்டுகள், கிரீம் பிஸ்கெட்டுகளை அளவோடு மட்டுமே கொடுக்க வேண்டும். வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். கடையில் பொரித்த உணவுகள்: சமோசா, பக்கோடா, பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை அடிக்கடி கொடுக்க வேண்டாம். வீட்டிலேயே சுத்தமான முறையில் தயாரித்து கொடுப்பது சிறந்தது. குளிர்பானங்கள், செயற்கை பானங்கள்: அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறுகள் மற்றும் மில்க் ஷேக்குகளை குழந்தைகளுக்கு தவிர்ப்பது நல்லது. அவற்றுக்கு பதிலாக வீட்டில் தயாரித்த இயற்கை பழச்சாறுகளை அளவோடு கொடுக்கலாம். ஐஸ்கிரீம்: ஐஸ்கிரீமை அடிக்கடி கொடுப்பதை தவிர்த்து, வீட்டிலேயே பழங்கள் கொண்டு தயாரிக்கும் குளிர்பானம் அல்லது பழக்கூழ் போன்றவற்றை மாற்றாக கொடுக்கலாம். நூடுல்ஸ்: உடனடி நூடுல்ஸில் உப்பு மற்றும் சுவையூட்டிகள் அதிகமாக இருக்கக்கூடும். அதற்கு பதிலாக ராகி சேமியா, இடியாப்பம், காய்கறிகள் போன்றவற்றை சேர்த்து வீட்டிலேயே ஆரோக்கியமான நூடுல்ஸ் தயாரித்து கொடுக்கலாம். பாக்கெட் நொறுக்குத் தீனிகள்: அதிக உப்பு, சர்க்கரை மற்றும் சுவையூட்டிகள் உள்ள பாக்கெட் உணவுகளை குறைப்பது நல்லது. கடலைமிட்டாய், எள்ளுருண்டை, வீட்டில் செய்த முறுக்கு போன்றவற்றை ஆரோக்கியமான மாற்றாக கொடுக்கலாம். மார்பு, தோள், கைகள் வலிமையாக வேண்டுமா? தினமும் புஷ்-அப் செய்யுங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/7-foods-parents-must-avoid-for-kids




