தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குநர் சேரன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ் சினிமாவின் நடிகர்கள் பலரும் சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்து வருகிறார்கள். சமீபத்தில் லெஜெண்ட் சரவணன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட சிலர் இணைந்திருந்தனர். Sivakarthikeyan அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த சங்கத்தினர், அவரிடம் சங்கத்தில் இணையுமாறு கோரிக்கை வைத்திருந்தனர். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும், பாடலாசிரியராகத் தன்னை எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தது குறித்து, அச்சங்கத்தின் தலைவர் சேரன், "இன்று மரியாதை நிமித்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விழாவில் கலந்துகொள்வது தொடர்பாகவும் சிவகார்த்திகேயனை எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக நானும், என்னுடன் பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இயக்குநர் செல்வபாரதி, இயக்குநர் கே.பி.பி. நவீன் ஆகியோர் சந்தித்தோம். *தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் திரு. சிவகர்த்திகேயன்* இன்று மரியாதை நிமிர்த்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விழாவில் கலந்துகொள்வது தொடர்பாகவும் திரு சிவகார்த்கிகேயன் அவர்களை எழுத்தாளர்கள் சங்கத்தலைவராக நானும், என்னுடன்… — Cheran Pandiyan (@CheranDirector) September 22, 2026 எங்களின் வேண்டுகோளை ஏற்றுப் பாடலாசிரியராக இணைந்ததோடு அல்லாமல் சங்கத்திற்காகச் சில ஆலோசனைகளும் வழங்கினார். விழாவிற்கு வருவதாகவும் கூறி நிறைவான மனதுடன் எங்களை வழியனுப்பி வைத்ததை மகிழ்வாகப் பகிர்கிறோம். தொடரட்டும் வெல்லட்டும் உங்கள் முயற்சிகள்!" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/kollywood/sivakarthikeyan-joins-writers-association-lyricist-cheran




