குழந்தைகளை சமூக வலைதளங்களுக்கு அடிமையாக்கும் வகையில் செயலிகளை வடிவமைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ‘மெட்டா’ நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.162 கோடி அபராதத்தை செலுத்த அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.‘ பேஸ்புக்’, ‘இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக வலைதளங்களை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் 47 மாகாண அரசுகள் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் குழந்தைகளை அதிக நேரம் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறுவர், சிறுமிகளின் மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.குறிப்பாக, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எளிதில் இந்த செயலிகளுக்குள் நுழையும் வகையில் மெட்டா நிறுவனம் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேரில் ஆஜராக வேண்டிய சூழலும் ஏற்பட்டது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே, ரூ.162 கோடி அபராதத்தை செலுத்த மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/மெட்டா-நிறுவனத்துக்கு-ரூ162-கோடி-அபராதம்-அமெரிக்க-கோர்ட்-அதிரடி




