ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சூரி, "முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் வெற்றிமாறன் சார், மிஷ்கின் சார், பாலா சார், ராம் சார், எல்லோரும் இருக்கிறார்கள். ஏழு கடல் ஏழு மலை படத்தில். அவர்களுடன் எப்படியாவது பணியாற்றிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்தவகையில் வெற்றிமாறன் அண்ணனுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்து படப்பிடிப்பைத் தொடங்கினோம். அப்போது அன்பு தம்பி அருண் விஷ்வா மூலமா எனக்கு ராம் அண்ணன் பழக்கமானார். 'இந்த மாதிரி ஒரு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் நடிக்கிறீர்களா?' என்று தம்பி அருண் விஷ்வா கேட்டார். 'பெருமையால் அழுகிறேன்.'- புற்றுநோயை வென்று கதாநாயகியான வளர்ப்பு மகள்; நெகிழ்ந்த விவேக் ஓபராய் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் கொஞ்சம் பயமாக இருக்கிறது என்றேன். 'ராம் சார் சிறப்பாக சொல்லிக்கொடுப்பார்' என்றார். பிறகு அவர்களின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். சிமென்ட்டிற்கு பதில் அலுவலகம் முழுவதும் புத்தகத்தை வைத்து பூசி இருந்தார்கள். எல்லாப் பக்கமும் புத்தகமாக இருந்தது. நடிகர் சூரி பிறகு அவர் (ராம்) வந்தார் ஒரு இயக்குநர் மாதிரியே பேசவில்லை. ரொம்ப ஜாலியாக பேசினார். என்னைப் பற்றி நிறைய பேசினார். அவர் பேச பேச எனக்கு தைரியம் வந்துவிட்டது. அப்படித்தான் இந்தப் படத்தில் நடித்தேன்" என்று பகிர்ந்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/kollywood/actor-soori-speech-yezhu-kadal-yezhu-malai-pre-release-event




