சென்னை, ஆக்சன் கதைக்களத்தில் வெளியான ‘டிசி’ படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை உலகளவில் ரூ.18 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். குறிப்பாக, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். ஹீரோவாக களமிறங்கிய லோகேஷ் இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கதாநாயகனாகவும் களமிறங்கியுள்ளார். ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ‘டிசி’ படத்தில் லோகேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியானது முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தேவதாஸாக லோகேஷ் ‘டிசி’ படத்தில் லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை வாமிகா கபி சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ஆக்சன் காட்சிகளுக்கு அனிருத்தின் பின்னணி இசை கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 3 நாட்களில் ரூ.18 கோடிக்கும் மேல் வசூல்! இதற்கிடையே ‘டிசி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, படம் வெளியான 3 நாட்களில் உலக அளவில் ரூ.18 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/lokesh-steps-in-as-devadasthe-box-office-hunt-begins




