சென்னை, அல்லு அர்ஜுனின் 'ராக்கா' படத்தில் நடிகை நைலா கிரேவால் நடிக்கிறார். படப்பிடிப்பு இயக்குநர் அட்லீ இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'ராக்கா' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அறிவியல் புனைகதை பின்னணியில் உருவாகும் அதிரடி திரைப்படமாக இது உருவாகி வருகிறது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு நடிகை இத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐந்து கதாநாயகிகள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகளின் பெயர்கள் பேசப்பட்டு வந்தநிலையில், அண்மையில், மலையாள நடிகை பெமினா ஜார்ஜ், இப்படத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்தினார். இந்த நிலையில், மேலும் ஒரு நடிகை 'ராக்கா' படத்தில் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது. நைலா க்ரேவால் உறுதி ரன்பீர் கபூர் நடித்த 'தமாஷா' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நைலா கிரேவால். அதைத் தொடர்ந்து 'பரேலி கி பர்பி', 'தப்பட்', 'இஷ்க் விஷ்க் ரீபவுண்ட்' உள்ளிட்ட திரைப்படங்களிலும், நெட்பிளிக்ஸ் தொடர்களிலும் நடித்து வரவேற்பை பெற்றார். 'அட்லீயுடன் பணியாற்றுவது என் கனவு' இதற்கிடையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நைலா கிரேவால், 'ராக்கா' படத்தில் நடிப்பதாக தெரிவித்தார். அவர் பேசுகையில், "நான் அல்லு அர்ஜுனின் 'ராக்கா' திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. தற்போது அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இதுவரை பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்த எனக்கு, தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார். அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் 'ராக்கா' திரைப்படம், இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் ஒன்றாக கருதப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/naila-grewal-the-punjabi-girl-who-made-her-debut-in-allu-arjuns-movie-raaka-do-you-know-who-she-is




