செயின்ட் கிட்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ட்ரின்பகோவை வீழ்த்தி பார்படோஸ் அபார வெற்றி பெற்றது. கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் - ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 27வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்படோஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ட்ரின்பகோ 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்தார். ட்ரின்பகோ அபார வெற்றி இதனை தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பார்படோஸ் 18.3 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பார்படோஸ் ட்ரைடென்ட்சை 35 ரன்கள் வித்தியாசத்தில் ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய ட்ரின்பகோ வீரர் சுனில் நரைன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-barbados-stun-trinbago




