திருச்சி, சேலம் கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாகவும், சில ரெயில்கள் புறப்படும் இடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்விவரம் வருமாறு:- மயிலாடுதுறை-சேலம் எக்ஸ்பிரஸ் (எண்:16811) இன்று (சனிக்கிழமை) மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு வீரராக்கியம் வரை மட்டுமே செல் லும். சேலம் செல்லாது. மறுமார்க்கத்தில் சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (எண்:16812) இன்று பகல் 2.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கரூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும். அதுபோல் பாலக்காடு டவுன் - திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்:16844) இன்று (சனிக்கிழமை) பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு பசூர் வரை மட்டுமே இயங்கும். திருச்சிக்கு வராது. மேலும் திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் (எண்:56832) இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 11-ந்தேதி வரை (5-ந்தேதி தவிர) காரைக்குடியில் இருந்து காலை 9.50 மணிக்கு பதிலாக காலை 10.15 மணிக்கு திருச்சிக்கு புறப்படும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-via-salem




