மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை, உயிரை பணயம் வைத்து ரெயில்வே கேட் கீப்பர் காப்பாற்றியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சீர்காழி அருகே உள்ள அரசூர் ரெயில்வே கேட் லெவல் கிராசிங்கில், ரெயில் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தது. அப்போது கேட் அருகே நின்றிருந்த நபர் ஒருவர், ரெயில் அருகே வருவதை பார்த்து கேட்டை கடந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது பணியில் இருந்த கேட் கீப்பர் இதைப் பார்த்ததும், நொடியும் தாமதிக்காமல் உடனடியாக ஓடிச் சென்று அந்த நபரை ரெயில் தண்டவாளத்தில் இருந்து இழுத்து காப்பாற்றினார். ரெயில் அவர்களை கடந்து சென்றது. இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. தனது உயிரை பணயம் வைத்து தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றிய கேட் கீப்பரை அப்பகுதி மக்கள், பயணிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/man-who-attempted-suicide-by-jumping-in-front-of-train-gatekeeper-saves-him-at-the-risk-of-his-life




