பெங்களூரு, ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, சிறையில் நடக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் நடிகை பவித்ரா கவுடா விஷம் கேட்பதாக கோர்ட்டில் வக்கீல் பரபரப்பு தகவலை தெரிவித்தார். சாட்சிகளை அழிக்க வாய்ப்பில்லை ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை பெங்களூரு 59-வது சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையின்போது பவித்ரா கவுடா தரப்பில் மூத்த வக்கீல்கள் பாலன், நாராயணசாமி ஆகியோர் ஆஜராகினர். இதில் பாலன் கூறியதாவது, பவித்ரா கவுடா பெண் என்பதால், தனது மகளை கவனித்து கொள்ள வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. அவர் ஏற்கனவே ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்துவிட்டார். பெரும்பாலான சாட்சிகள் விசாரிக்கப்பட்டுவிட்டதால், ஜாமீன் வழங்கினாலும் சாட்சிகளை கலைக்கவோ அல்லது ஆதாரங்களை அழிக்கவோ வாய்ப்பில்லை என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு சிறப்பு வக்கீல் பிரசன்ன குமார், 60 சாட்சிகளின் விசாரணை முடியாமல் ஜாமீன் கோர முடியாது என ஐகோர்ட்டு தெளிவாக உத்தரவிட்டுள்ளது. ஆகையால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுமாறு கூறினார். பவித்ரா கவுடா வேதனை இதற்கிடையே, பவித்ரா கவுடாவின் மற்றொரு வக்கீல் நாராயணசாமி கோர்ட்டில் பரபரப்பு தகவலை தெரிவித்தார். அதில், சிறை அதிகாரிகள் பவித்ரா கவுடாவை மிகவும் மோசமாக நடத்துகின்றனர். அவரை நான் சந்திக்க சென்றபோது, 'சிறையில் நடக்கும் கொடுமைகளை தாங்க முடியவில்லை. எனக்கு விஷம் கொடுத்தால் போதும்' என வேதனையுடன் கூறினார். மற்ற கைதிகளுக்கு இல்லாத சித்ரவதை இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எனக்கு மட்டும் நடக்கிறது என்று கூறினார். மேலும் அவரை தனி அறைக்கு மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சிறையில் பவித்ரா கவுடா அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து எழுதிய கடிதத்தை சமர்ப்பிக்க கோர்ட்டிடம் அனுமதியும் கோரியுள்ளார். விசாரணை ஒத்திவைப்பு இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சிறையில் பவித்ரா கவுடாவின் நிலை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் கோரிக்கை குறித்து உடனே அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அவர், அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி ஜாமீன் மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-cannot-bear-the-cruelty-in-prison-just-give-me-poison-pavithra-gowdas-anguish




