இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது. புதிய நடிகர்கள், புதிய காட்சியமைப்புகள் என ‘ஹாரி பாட்டர்’ உலகம் மீண்டும் திரையில் விரிவடைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களை கவர்ந்த மாயாஜால படம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த மந்திர உலகத்தை மையமாக கொண்டு 8 பாகங்களாக வெளியான படம் ‘ஹாரி பாட்டர்’. ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர்' நாவலை அடிப்படையாக கொண்டு வார்னர் புரோஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்த படங்களில் டேனியல் ராட்க்ளிப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் மூன்று முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படங்கள் உலகளவில் பெரும் வசூல் சாதனைகளை படைத்து வரவேற்பை பெற்றன. புதிய 'ஹாரி பாட்டர்' வெப் சீரிஸ் இந்த நிலையில், அந்த 8 பாகங்களை வைத்து புதிதாக 'ஹாரி பாட்டர்' வெப் சீரிஸ் இப்போது உருவாகி வருகிறது. இதனை மார்க் மைலோட் இயக்கி வருகிறார். இத்தொடரில், டொமினிக் மெக்லாலின் ஹாரி பாட்டராகவும், அலாஸ்டர் ஸ்டவுட் ரான் வீஸ்லியாகவும், அரபெல்லா ஸ்டாண்டன் ஹெர்மியோன் கிரேஞ்சராகவும் நடிக்கின்றனர். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஜான் லித்கோ ஆல்பஸ் டம்பிள்டோர் ஆகவும், ஜேனட் மெக்டீர் மினர்வா மெக்கனகல் ஆகவும், பாப்பா எசிடு செவரஸ் ஸ்னேப் ஆகவும் நடிக்கின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தில் பிரம்மாண்ட வெளியீடு பிரான்டே, வார்னர் பிரதர்ஸ், ஹேடே பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வரும் “ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாசபர்ஸ் ஸ்டோன்” தொடரின் முதல் சீசன் (‘Harry Potter and the Sorcerer's Stone’ கதையை மையமாகக் கொண்டு) வருகிற டிசம்பர் 25, 2026 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டீசர் டிரெய்லர் வெளியீடு இந்த நிலையில், இந்த தொடரின் டீசர் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது. புதிய நடிகர்கள், புதிய காட்சியமைப்புகள் என ‘ஹாரி பாட்டர்’ உலகம் மீண்டும் திரையில் விரிவடைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-teaser-trailer-for-the-harry-potter-and-the-philosophers-stone-series-has-been-released



