புதுடெல்லி, வர்த்தகம், முதலீடு மற்றும் வணிக ரீதியிலான கூட்டணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய வர்த்தக சபையை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக சிலோன் வர்த்தக சபை தகவல் தெரிவித்துள்ளது. இந்த குழுவில் உற்பத்தி, கட்டுமானம், பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் மருந்துகள், நீர் சுத்திகரிப்பு, தொழில்துறை கனிமங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இதுதவிர தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள், விவசாயம், பயணம் மற்றும் சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், மதுபானம் (பீர், சாராயம் மற்றும் ஒயின்) தயாரிப்பு, ஏற்றுமதி மற்றும் குடியேற்ற சேவைகள், நுண்கலைகள் மற்றும் பாரம்பரியம், விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தியா மற்றும் சிலோன் வர்த்தக சபை உறுப்பினர்களிடையே வரும் ஜூலை 28-ந்தேதி கலந்துரையாடல் மற்றும் அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது. இது தொடர்பாக இலங்கை வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு இடையிலான நேரடி வணிகத் தொடர்புகளை எளிதாக்கும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பங்கேற்பாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள கூட்டணிக்கான வாய்ப்புகளை அடையாளம் காணவும், சாத்தியமான கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிக்கவும், புதிய வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/indian-chamber-of-commerce-delegation-visits-sri-lanka-to-explore-business-alliances




