சென்னை, மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிடுமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மோசடி புகார் தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்து மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூன் 27-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார். முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில் அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் சோதனை கடந்த 16-ந்தேதி, அன்பில் மகேசின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 9 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகளை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின்னர், அன்பில் மகேசுக்கு சம்மன் அனுப்பியதன் அடிப்படையில், கடந்த 18-ந்தேதி அவரை நேரில் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மனுதாக்கல் இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அன்பில் மகேஸ் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், வழக்கின் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய விலக்களிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் ரிச்சர்ட்சன் வில்சன், வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல் இல்லாமல், மனுவை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை முடித்து, வழக்கை நாளை (புதன்கிழமை) விசாரணைக்குப் பட்டியலிடுமாறு ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/former-minister-anbil-mahesh-petition-hearing-tomorrow-high-court-order




