கிருஷ்ணகிரி, கல்லூரி மாணவர்கள் போன் செய்து காதல் தொல்லை கொடுத்ததால் பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எம்.தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரேந்திரன் மகள் பவித்ரா (17 வயது). இவர், சூளகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பவித்ரா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தொல்லை இந்த நிலையில் மாணவி பவித்ராவை, அதே பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவன் ஒருவர் காதலித்து வந்ததாகவும், அவனுக்கு ஆதரவாக 17 வயது கல்லூரி மாணவன் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் 2 மாணவர்களும் போன் செய்து மாணவிக்கு தொல்லை செய்து வந்ததாகவும், இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், பவித்ராவின் பெற்றோர், சூளகிரி போலீசில் புகார் அளித்தனர். தர்ணா போராட்டம் அதன்பேரில், பவித்ராவை காதலித்து வந்த 18 வயது மாணவனை போலீசார் கைது செய்தனர். மேலும், 17 வயது மாணவனை தேடி வருகின்றனர். தலைமறைவான மாணவனையும் கைது செய்ய வலியுறுத்தி பவித்ராவின் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று சூளகிரி போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார் தலைமறைவான மாணவனை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/plus-2-student-dies-by-suicide-after-college-students-harass-her




