சென்னை, விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வாழ்த்து அந்த வகையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், நல்ல உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளை பெற வாழ்த்துகிறேன். மக்களுக்கான உங்கள் சேவையிலும், சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான உங்கள் போராட்டத்திலும் தொடர்ந்து வலிமையுடன் செயல்பட வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/thirumavalavans-birthday-rahul-gandhi-wishes




