சென்னை, சாய் பல்லவி, ஸ்ரீலீலா வரிசையில் ‘டான்சிங் குயின்’ ஆக நாகதுர்கா இணைந்திருக்கிறார். தனி இடம் பொதுவாக ‘நடனம்’ என்றாலே கதாநாயகர்களின் பெயர்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், சமீபகாலமாக தங்களது நடனத் திறமையால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து, திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வரும் நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நடிப்புக்கு இணையாக நடனமும் கதாநாயகிகளின் மிகப்பெரிய பலமாக மாறி வருகிறது. அந்த வகையில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் தங்களது நடனத் திறமையால் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பெற்றுள்ளனர். சாய் பல்லவி, ஸ்ரீலீலா சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் கடினமான நடன அசைவுகளைக்கூட மிக எளிதாகச் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இவர்கள் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு உருவாகும் அளவுக்கு, அவர்களின் நடனம் திரைப்படங்களின் முக்கியமான அம்சமாக மாறியுள்ளது. மமிதா பைஜு ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான மமிதா பைஜுவும் தனது நடனத் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பாரம்பரிய நடனப் பயிற்சி பெற்றுள்ளதால், அவரது நடன அசைவுகளில் இயல்பான அழகும் தனித்துவமும் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ‘டான்சிங் குயின்’ இந்நிலையில், இந்த வரிசையில் மற்றொரு இளம் நடிகை நாகதுர்கா இணைந்துள்ளார். நாட்டுப்புறக் கலைப் பின்னணியுடன், இயல்பான அசைவுகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மறுபுறம், கதாநாயகியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். ’லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dance-baby-dancethose-four-are-something-special




