நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிஷ் ஏடி இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மலையாள திரையரங்குகளில் வெளியானது. ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் ‘பாவனா ஸ்டுடியோஸ்’ சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். நாயகனுக்கும் 10 வயது குறைவான நாயகிக்கும் இடையேயான காதல் கதையை மையமாகக் கொண்டு, வெளியான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கில் வெளியானது படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் நிவின் பாலி, மமிதா பைஜு நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியானது. கேரளத்தில் அதிக வசூலை குவித்த திரைப்படம் நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் கேரள மாநிலத்தில் அதிக வசூலைக் குவித்த திரைப்படம் என்ற பெயரைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 28 நாட்களில் ரூ300 கோடி வசூல் பகத் பாசில், இயக்குநர் திலீஷ் போத்தன் உள்ளிட்டோரின் தயாரிப்பில் உருவான இந்தப் படம், ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப் படைத்தது. படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு இந்த நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/ott/nivin-paulys-bethlehem-kudumba-unit-ott-release-date-announced




