திண்டுக்கல், கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள மங்களம்கொம்பு, தாண்டிக்குடி. பெரும்பாறை, கானல்காடு, கே.சி.பட்டி, குப்பம்மாள்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் காட்டு யானை, காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குக ளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் இரை மற்றும் தண்ணீர் தேடி மலைக்கிராமங்களுக்குள் வனவிலங்கு கள் புகுந்து மக்களை பீதியடைய செய்து வருகின்றன. இந்தநிலையில் பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு கிராமத்துக்குள் நேற்று கம்பீர தோற்றத்துடன் காட்டெருமை ஒன்று உலா வந்தது. அந்த காட்டெருமை மஞ்சள்பரப்பில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்களை உரசிக்கொண்டு சென்றது. இதனை பார்த்ததும் கிராம மக்கள் அச்சம் அடைந்ததுடன், பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். காட்டெருமையை கண்ட இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராமல் அதன் அருகே சென்று தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சுமார் 1 மணி நேரமாக கிராமத் தில் உலா வந்த காட்டெருமை, அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-indian-bison-enters-village-and-terrorizes-residents




