மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக முன்னாள் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி தொழிலதிபராக மாறிய மினார் மொண்டல் என்பவரின் வீட்டில் நேற்று முழுக்க போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். மேற்கு வங்காளத்தின் பிர்பூம் என்ற இடத்தை சேர்ந்த கல் வியாபாரி மற்றும் உள்ளூர் தொழிலதிபர் துலு மொண்டலின் உறவினரான மினார் மொண்டல் வீட்டில் நடந்த ரெய்டில் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு மாடிகள் கொண்ட வீட்டில் நடந்த ரெய்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர 16 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ண இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. அதோடு அந்த பணத்தை எடுத்துச்செல்ல டிரங்க் பெட்டிகளும் வரவழைக்கப்பட்டது. இரவு வரை ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டது. இதில் மொத்தம் 20 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு 16 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. என்ன காரணத்திற்காக இந்த ரெய்டு நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் மினார் கொண்டல் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அனுப்ரா மொண்டலுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த ரெய்டு குறித்து முதல்வர் சுவந்து அதிகாரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,''மணல் மாஃபியாவை ஒடுக்கியதற்காக சட்ட அமலாக்கப் பணியாளர்களின் பணி பாராட்டத்தக்கது. ஆதாரங்கள் அடிப்படையிலான துல்லியமான நடவடிக்கையைத் தொடர்ந்து, பீர்பூம் போலீசார், சட்டவிரோத மணல் மாஃபியா துலு மொண்டல் என்ற முகமது நஜிபுதீனின் மறைவிடத்தைக் குறிவைத்து ஒரு பெரிய சோதனை நடத்தினர். இதில் கோடிக்கணக்கில் பணம், 15 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு துலு மொண்டல் தனது மகளுக்கு பெங்காலி மற்றும் பாலிவுட் நடிகர்களை அழைத்து ஆடம்பரமான திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த திருமணத்திற்கான மொத்த செலவு ரூ. 100 கோடி என்றும், விருந்தினர் பட்டியலில் பல நடிகர்கள் இடம் பெற்றிருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/rs-20-crore-in-cash-and-15-kg-of-gold-seized-from-west-bengal-government-bus-drivers-home




