சென்னை, இந்தியாவில் வங்கிகளுக்கு வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையும் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளும் வழக்கமாக விடுமுறை விடப்படுகிறது. இது தவிர பண்டிகை நாட்களுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் மட்டும், 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகின்றன. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 4 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமின்றி, அக்டோபர் 10 மற்றும் 24-ந் தேதிகளில் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளிலும் நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது. இதுபோக காந்தி ஜெயந்தி, விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை போன்ற பல பண்டிகைகளும் விடுமுறை நாட்களாகும். அக்டோபர் 2 (மகாத்மா காந்தி ஜெயந்தி): தேசிய விடுமுறை. நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 10 (மகாளய அமாவாசை): பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 17 (மகா சப்தமி): அகர்தலா, ஐஸ்வால், புவனேஸ்வர், சென்னை, குவாஹாத்தி, இம்பால், இடாநகர், கோஹிமா, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மற்றும் ஷில்லாங்கில் கிளைகள் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 19 (தசரா, மகா நவமி, ஆயுத பூஜை, துர்கா பூஜை): அகர்தலா, ஐஸ்வால், புவனேஸ்வர், சென்னை, குவாஹாத்தி, இம்பால், இடாநகர், கோஹிமா, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மற்றும் ஷில்லாங்கில் கிளைகள் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 20 (தசரா, விஜயதசமி, மகாநவமி): கங்க்டாக் மற்றும் இம்பால் தவிர, பெரும்பாலான முக்கிய நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 21 (விஜயதசமி, துர்கா பூஜை): அகர்தலா, பெங்களூரு, கங்க்டாக், குவாஹாத்தி, கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 22 மற்றும் 23 (துர்கா பூஜை): கங்க்டாக்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 26 (லட்சுமி பூஜை, அரியணை ஏறிய நாள், மகரிஷி வால்மீகி பிறந்த தினம்): அகர்தலா, சண்டிகார், ஜம்மு, சிம்லா மற்றும் ஸ்ரீநகரில் உள்ள கிளைகள் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 29 (கர்வா சவுத்): சண்டிகாரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 31 (சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள்): அகமதாபாத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வங்கி விடுமுறை நாட்களில் வங்கிகளுக்கு நேரடியாக செய்ய வேண்டிய பரிவர்த்தனைகள் மட்டுமே பாதிக்கப்படும். காசோலை பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை செய்ய முடியாது. ஆனால் டிஜிட்டல் சேவைகள் பெறுவதில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/do-you-know-how-many-days-of-holidays-banks-have-this-month-alone




