சென்னை, இதற்கு முன்பு நான் நடித்த படங்கள் சீரியசான கதாபாத்திரங்களில் என்னை நிலைநிறுத்தியது. ஆனால் எனக்கு ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அப்படி அமைந்ததுதான் ‘ஹேஷ்டேக் லவ்’ படம் என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘புத்தம் புது காலை’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி-2’ திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் குழந்தைக்கு தாயாகவும், விளையாட்டு வீராங்கனையாகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது நடிகர் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக ‘ஹேஷ்டேக் லவ்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வெப் தொடர் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதில் அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘காதல் கதைகளில் நடிக்க வேண்டும்’ ‘ஹேஷ்டேக் லவ்’ வெப் தொடர் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது: “இதற்கு முன்பு நான் நடித்த படங்கள் சீரியசான கதாபாத்திரங்களில் என்னை நிலைநிறுத்தியது. சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி-2’ திரைப்படத்திலும் ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும், விளையாட்டு வீராங்கனையாகவும் நடித்திருந்தேன். ஆனால் எனக்கு ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அப்படி அமைந்ததுதான் இந்தப் படம். இதில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடித்தது பெரிய மகிழ்ச்சி. நான் எதிர்பார்த்திருந்த ஒரு விஷயம் என்றும் சொல்லலாம். இந்த தொடரில் ‘தாரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்த கதாபாத்திரம் அப்படியே என்னைப் பிரதிபலிப்பதாகவே உணர்கிறேன். அந்த வகையில், இதில் என்னையே நான் பிரதிபலித்துள்ளேன் என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/after-a-string-of-serious-roles-aishwarya-lekshmi-turns-to-a-romantic-story




