சென்னை தேசிய தன்னார்வ ரத்ததான நாளை முன்னிட்டு முதல் - அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தேசிய தன்னார்வ ரத்ததான நாள் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்து உயிர்களைக் காப்பதுடன், மனிதநேயத்தின் உயரிய மாண்பை நிலைநாட்டும் அனைத்து ரத்தக் கொடையாளர்களுக்கும் தேசிய தன்னார்வ ரத்ததான நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! அறுவை சிகிச்சை, விபத்து உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் உயிர்களைக் காக்க ரத்ததானம் இன்றியமையாதது. நாம் கொடையாக அளிக்கும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும், ஒரு மனிதனின் உயிரைக் காப்பதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையையும் பாதுகாக்கிறது. உயிர்காக்கும் தூதர்கள் ரத்ததானம் அளிக்கும் கொடையாளர்கள், சமூகத்தின் உண்மையான உயிர்காக்கும் தூதர்களாகத் திகழ்கின்றனர். அவர்களின் தன்னலமற்ற சேவையும், உன்னதமான மனிதநேயமும் என்றும் போற்றத்தக்கவை. தன்னார்வ இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துச்சென்று, ரத்ததானம் செய்யும் விழிப்புணர்வுமிக்க ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்! ரத்ததானம் செய்வோம்! உயிர்களைக் காப்போம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/national-voluntary-blood-donation-day-chief-minister-vijay-greets




