விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு. முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பரில் நிறைவடைந்து வந்தன. நான்காவது சீசன் அதாவது கோவிட் சமயத்தில் ஒளிபரப்பு தாமதமாகி அக்டோபர் முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியது. அப்போது முதல் சென்ற ஆண்டு வரை அக்டோபர் முதல் வாரத்திலிருந்துதான் ஒளிபரப்பு தொடங்கி வந்தது. மறு வருடம் பொங்கல் பண்டிகையுடன் நிகழ்ச்சி நிறைவடையும். இந்நிலையில் இந்தாண்டு இதில் மாற்றத்தைச் செய்திருக்கிறார்கள். Bigg Boss Tamil House அதாவது நிகழ்ச்சி தொடங்கும் வருடத்துக்குள்ளாகவே முடிக்கவிருக்கிறார்கள். அதன்படி இந்தாண்டு நிகழ்ச்சி தொடங்கும் தேதி தெரிய வந்துள்ளது. செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 ஒளிபரப்பாகவிருக்கிறது. அதிலிருந்து 105 நாட்கள் ஒளிபரப்பாக உள்ளது. இந்த வருடமும் நிகழ்ச்சியை விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்களைத் தேடும் படலம் தொடங்கி விட்டது. டிவி, சினிமா, மாடலிங் என பல துறைகளிலும் இருக்கும் பலரிடமும் பேசி வருகிறார்களாம். ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்கள் விகடன் தளத்தில் வெளியாவதை அற்வீர்கள். இந்தாண்டும் அதே எக்ஸ்க்ளூசிவ்களுக்கு விகடனோடு தொடர்பிலேயே இருங்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/television/biggboss-tamil-season-10-starts-in-september-6th-in-vijay-tv



