ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாக நடிக்கும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், பிரீத் சிங் சூர்ப்பனகையாக நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி இந்தப் படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இந்த படத்தின் இந்தி தியேட்டர் விநியோக உரிமையை 'தர்மா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 100 கோடி பார்வைகளை பெற்ற “ராமாயணா” டிரெய்லர் ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை 30ம் தேதி காலை 4:15 மணிக்கு (பிரம்ம முகூர்த்தத்தில்) வெளியானது. பிரமாண்ட விஷுவல் எபெக்ட்ஸ், வலுவான பின்னணி இசை, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. டிரெய்லரின் முதல் காட்சியே ராவணனான யாஷ், எப்படி அரசனாக மாறினார் எனக் காட்டப்பட்டு பின் ராமனை அறிமுகம் செய்கின்றனர். நேரடியாக இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் மற்ற பான் இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் யூடியூப் உள்பட அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாக 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு இந்நிலையில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணா’ படத்தின் “ஜெய் ஜெய் ராம்” பாடலின் தமிழ் பதிப்பு சமீபத்தில் வெளியானது. கார்த்திக் நேத்தா எழுதியுள்ள தமிழ் வரிகளுக்கு, பாடகி சின்மயி, ஹரிசரண் இணைந்து பாடியுள்ளனர். விநாயகர் சதுர்த்தியன்று இப்பாடலின் இந்தி பதிப்பு வெளியானது. படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியீடு ரன்பீர் கபூர் ராமனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் ‘ராமாயணா’ படத்தில் ராவணனாக உருவெடுத்துள்ள யாஷின் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தங்க ஆபரணங்களுடன் யாஷின் மிரட்டலான பார்வை எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. Together Always, in Dharma. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ramayana-film-new-posters-out




