பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தங்கியிருக்கவிருந்த ஹோட்டலுக்கு அருகே குண்டு வெடிப்பு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் ஜனாதிபதி அகமது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தலைமையிலான கிளர்ச்சியாளர்கள், 2024-ல் பஷர் அல்-அசாத்தின் (Bashar al-Assad) சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய பிறகு, அங்கு செல்லும் முதல் ஐரோப்பிய தலைவர் என்ற பெருமையுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் நேற்று டமாஸ்கஸ் சென்றடைந்தார். இந்தநிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகேயே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சாலைகள் மூடப்பட்டதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், புகை மூட்டம் எழும்புவதைக் காண முடிந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/macron-safe-after-explosions-in-syrian-capital-during-french-presidents-visit




