சென்னை, காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ப. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சிக்கு - சமீபத்தில் புதிய மாநில தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம், செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் என தொடர்ந்து கட்சி பணிகள் வேகம் எடுத்துள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு 10 நாள் பயிற்சி வழங்கும் கூட்டம் சென்னை ஈ.சி.ஆரில் வரும் 21-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுட்டு உள்ளது. ராகுல் காந்தி இந்த பயிற்சி கூட்டத்தில் ஏதாவது ஒரு நாள் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பல்வேறு, ஆலோசனைகளை வழங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 10 நாட்கள் பயிற்சி முகாம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் மூலம் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு வருகிற ஜூலை மாதம் 22 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழக கடற்கரை விடுதியில் 10 நாட்கள் பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டுள்ளனர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. ஆலோசனையின் பேரில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பங்கேற்கும் இந்த பயிற்சி முகாமினை ஒருங்கிணைக்க எஸ்.டி. நெடுஞ் செழியன் (9840077921), ப. செந்தமிழ் அரசு (9443437650), எஸ்.எஸ். குமார் (9940098743) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பயிற்சி முகாம் தொடர்பாக, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/10-days-training-camp-for-congress-committee-leaders-p-manickam-tagore




