சென்னை, சென்னை, தியாகராய நகர், உஸ்மான் சாலையில் அமைந்துள்ள அரசமரத்து விநாயகர் ஆலயத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தரிசனம் செய்தார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சங்கடஹர சதுர்த்தி விநாயக பெருமானுக்கு உகந்த புனித நாளான சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, இன்று சென்னை, தியாகராய நகர், உஸ்மான் சாலையில் அமைந்துள்ள அரசமரத்து விநாயகர் ஆலயத்தில் தரிசனம் செய்து, விநாயகப் பெருமானின் அருளை பெற்றேன். மனமார வழிபட்டேன் 1995ஆம் ஆண்டு இந்த ஆலயத்தை நிறுவி, இன்று வரை அதன் வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் ஆன்மிக பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியில் நீண்டகாலமாக மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்தி வரும் கடம்பூர் ராஜசேகருடன் இணைந்து, விநாயக பெருமானை மனமார வழிபட்டேன். பிரார்த்தனை இந்த புனிதமான சங்கடஹர சதுர்த்தி நாளில், அனைத்து தடைகளும் நீங்கி, பாரத நாட்டின் மக்கள் அனைவரும் சகல செல்வங்களும், நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், அமைதியும், வளமுமுடன் இன்புற்று வாழ வேண்டி விநாயகப் பெருமானிடம் மனமார பிரார்த்தனை செய்தேன். விநாயக பெருமானின் அருள் அனைவரின் வாழ்விலும் என்றும் பொழியட்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/thyagaraya-nagar-nainar-nagendran-offers-prayers-at-the-arasamara-vinayagar-temple




