புதுடெல்லி, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 40 நாட்களாகியும் இன்னும் முடித்து வைக்கப்படவில்லை. இந்த நிலையில் அக்டோபர் 11 முதல் 15-ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 2029-ம் ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலின் போது பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பா.ஜ.க. அரசு விரும்புகிறது. இதற்காக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. தற்போது மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆகும். இதை 50 சதவீத அளவுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்தினால் வட மாநிலங்களுக்கு கூடுதல் இடங்களும் குடும்பக் கட்டுப்பாட்டை தீவிரமாக செயல்படுத்திய தென் மாநிலங்களுக்கு குறைந்த இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டது. மசோதா தாக்கல் அதனால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன. எல்லா மாநிலங்களிலும் 50 சதவீத உயர்வு இருக்கும் என மத்திய அரசு உறுதி மொழி கொடுத்தது. இருந்தாலும் அதை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து விட்டன. இருந்தாலும் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற ஏப்ரல் மாதம் 16 முதல் 18ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. அதில் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு ஆதரவு தேவை. அதனால் அந்த மசோதா தோல்வியில் முடிந்தது. இருந்தாலும் மத்திய அரசு அதன் முயற்சியில் தீவிரமாக உள்ளது. நாடாளுமன்ற மழைக் கால கூட்டம் ஜூலை 20 முதல் அக்டோபர் 13ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தொடரின் போது மீண்டும் மசோதாவை கொண்டுவர மத்திய அரசு நினைத்தது. ஆனால் அப்போது வேறு சிக்கல்கள் எழுந்ததால் கைவிடப்பட்டது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு மழைக்கால கூட்டம் முடிந்து 40 நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் அந்த கூட்டத் தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படவில்லை. இப்படி நீண்ட நாட்கள் முடித்து வைக்கப்படாமல் இருப்பது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. ஆகவே ஒரு சிறப்புக் கூட்டத்தை மீண்டும் கூட்ட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக பல நாள்களுக்கு முன்னரே செய்தி வெளியானது. அதாவது நவராத்திரி தொடங்குவதற்கு முன்னர் இந்தக் கூட்டம் நடத்தப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் நவராத்திரி சமயத்திலேயே சிறப்புக்கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக இப்போது தெரியவந்துள்ளது. அக்டோபர் முதல் 20-ஆம் தேதி வரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது. 3 பெண் தெய்வங்களை போற்றும் வகையில் இந்த விழா நடக்கும். ஆகவே பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இந்த நவராத்திரி விழா சமயத்தில் நிறைவேற்றுவதுதான் ஏற்புடையது என்று மத்திய அரசு கருதுகிறது. ஆகவே அக்டோபர் 11 முதல் 16-ஆம் தேதி வரை சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு தொடரையும் கூட்டுவதும், முடித்து வைப்பதும் ஜனாதிபதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/monsoon-session-remains-unconcluded-after-40-days-special-parliament-session-from-october-11-to-15




