மும்பையைச் சேர்ந்த பிரீத் பங்கஜ் ஜெயின்(31) என்பவருக்கு மைனர் பெண் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. சமீபத்தில் அப்பெண்ணுக்கு பிரீத் பங்கஜ் ஜெயின் வயது குறித்த உண்மை தெரிய வந்தது. உடனே அப்பெண் ஜெயினின் சமூக வலைதள கணக்கை பிளாக் செய்துவிட்டார். அப்பெண்ணை தொடர்பு கொள்ள ஜெயின் முயன்றார். ஆனால் முடியவில்லை. அப்பெண் அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பெண்ணை தேடி ஜெயின் அமெரிக்காவிற்கு சென்றார். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் டேவிட்சன் கவுண்டியில் அப்பெண் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு நேரடியாக சென்றார். அங்கு உபெர் டாக்ஸி ஒன்றை ஏற்பாடு செய்து அதன் மூலம் மைனர் பெண்ணை பின் தொடர்ந்து சென்றார். அவரின் இந்த நடவடிக்கையை கவனித்த டாக்சி டிரைவர், இது குறித்து சந்தேகப்பட்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். உடனே போலீஸார் விரைந்து செயல்பட்டு ஜெயினை பிடித்துச் சென்று விசாரித்தனர். விசாரணையின்போது, ஆன்லைன் டேட்டிங் மூலம் தனக்குத் தெரிந்த பெண்ணைச் சந்திக்கச் சென்றதாகவும், அவருக்கு பரிசு கொடுக்க முயன்றதாகவும் ஜெயின் போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் ஜெயின் விரட்டிச் சென்ற பெண் ஒரு மைனர் என்று தெரிய வந்துள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், ஜெயின் நீண்ட காலமாக சிறுமியுடன் ஆன்லைன் பழக்கத்தில் இருந்தபோது, தனது உண்மையான வயது மற்றும் அடையாளத்தை மறைத்ததாகத் தெரிய வந்துள்ளது. இந்த உண்மை தெரிந்ததும் அப்பெண் ஜெயினுடனான உறவை துண்டித்ததாகக் கூறப்படுகிறது. ஜெயினைக் கைதுசெய்து அவரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தினர். அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை காவலில் வைக்க உத்தரவிட்டது. அமெரிக்காவில் மைனர் பெண்ணை சந்தித்துப் பேசி அவரை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்ததாக ஜெயின் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/man-arrested-after-traveling-to-the-us-to-find-a-minor-girl-who-blocked-him-online-upon-discovering-his-true-age




