கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில் 11 பேர் பலியான நிலையில், 29 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், NIA தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையில், ``கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஹூண்டாய் i20 காரில் உமர் என்பவர் சென்றிருக்கிறார். மாலை 6.37 மணியளவில் அவர் லால் மந்திர் அருகே காரை நிறுத்த முயன்றிருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்திருக்கிறது. என்.ஐ.ஏ - NIA இது பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவின் மூலம் தெரியவந்தது. மேலும், அங்கு காவல்துறைப் பாதுகாப்பும் அதிகமாக இருந்ததால், காரைத் திட்டமிட்டபடி அங்கு நிறுத்த முடியாமல் திரும்பியவர், பின்னர் காரை செங்கோட்டை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். சில நிமிடங்களுக்குப் பிறகு, செங்கோட்டையின் 4-வது நுழைவுவாயில் அருகே காரை நிறுத்தியிருக்கிறார். மாலை 6.50 மணியளவில் குண்டு வெடித்தது. கார் குண்டுவெடிப்பை நடத்துவதற்காக சிறப்பு முறையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், உமருடன் தொடர்புடையவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் இதர பொருட்களிலும் ஒரே வகையான ரசாயனங்கள் இருப்பது தடயவியல் பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. இதன்மூலம் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட குழு செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ``ஆதவ் அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில்." - முதல்வர் விஜய்யைச் சாடும் அப்பாவு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/nia-stated-that-the-red-fort-was-not-the-initial-target-for-delhi-car-blast



