நெடுஞ்சாலை திட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பீகார் மாநிலத்தில் முசாபர்பூர்- சீதாமர்ஹி- சோன்பர்சா பகுதியை இணைக்கும் 83 கி.மீ. நீள 4 வழிச்சாலையை மேம்படுத்த ₹3 ஆயிரத்து 591 கோடி மதிப்பீட்டில் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.மேற்கு வங்காளம், ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய ரெயில்வே அமைச்சகத் தின் 4 ரெயில்வே திட்டங்களுக்கு 39 ஆயிரத்து 450 கோடி செலவில் மந் திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 4 திட்டங்களும், 60 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஏறத்தாழ 6 ஆயிரத்து 448 கிராமங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். ரெயில்வே திட்டங்கள் இதில் தமிழ்நாட்டின் கும்மிடிப்பூண்டிக்கும், ஆந்திர பிரதேச மாநிலம் கூடூ ருக்கும் இடையே 90 கி.மீ. தொலைவுக்கு ரெயில் 3, 4-வது வழித்தடம் அமைப்பதும் அடங்கும். இது மேற்கு வங்காளம் ஹவுரா- சென்னை இடையிலான முக்கிய ரெயில் பாதையை 4 வழிப்பாதையாக மாற்றும் பணியை உள்ளடக்கியது. இந்த ஹவுரா- சென்னை இடையிலான வழித்தடம் மிகவும் முக்கியமானது. இந்திய ரெயில்வேயில் முக்கியமான 7 ரெயில் வழித்தடங்கள் உள்ளன. இதில் ஹவுராவில் இருந்து சென்னை வரை, 4 வழி ரெயில்வே பாதை யாக மாற்றுவதால், ஏராளமான ரெயில்கள் இயக்க முடியும். சரக்குகளை எளிதாக கொண்டு செல்ல முடிவதுடன், பராமரிப்பு பணிகளை எளிதாக்க முடியும்.மேலும் மேற்கு வங்காளத்தின் கரக்பூருக்கும், ஒடிசாவின் பத்ரக் (ரணி தால்) பகுதிக்கும் இடையே 173 கி.மீ. தொலைவுக்கு 4-வது வழித்தடம் அமைக்கவும், ஒடிசாவின் பத்ரக் மற்றும் ஹரிதாஸ்பூர் இடையே 75 கி.மீ. தொலைவுக்கு 4-வது வழித்தடம் அமைக்கவும், ஒடிசாவில் கட்டாக் மற்றும் படபந்தா இடையே 72 கி.மீ. தூரத்துக்கும் 3-வது மற்றும் 4-வது ரெயில் வழித்தடங்கள் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/new-railway-lines-from-gummidipoondi-to-gudur-union-cabinet-approves




